Home Archive by category

போர்ச்சுகீசில் இருந்து பிரேசிலுக்கு வந்த இதயம்

போர்ச்சுகீசில் இருந்து கொண்டு வரப்பட்ட டாம் பெட்ரோவின் இதயத்தை, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொண்டார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில், சுமார் 300 ஆண்டுகளாக போர்ச்சுகீசியர்களின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது.

அதனை தொடர்ந்து 1822 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் திகதி, போர்ச்சுகீசிய மன்னரான டாம் பெட்ரோ என்பவர், பிரேசிலை சுதந்திர நாடாக அறிவித்தார். தொடர்ந்து 1834 ஆம் ஆண்டு தனது 35வது வயதில் டாம் பெட்ரோ காலமானார்.

அன்று முதல் அவரது இதயம் போர்ச்சுகல் நகரமான போர்ட்டோவில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தங்க கலசத்தில் ஃபார்மல்டிஹைட் வேதிப்பொருளை பயன்படுத்தி டாம் பெட்ரோவின் இதயத்தை பாதுகாத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பிரேசில் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் சமயத்தில் இந்த இதயம் 3 வாரங்களுக்கு பிரேசில் அரசிடம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் பிரேசில் நாட்டின் 200வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு டாம் பெட்ரோவின்  இதயம் தற்போது பிரேசிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts