Home Archive by category

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட விரும்பினேன்! அஸ்வின் மனம் திறப்பு

அண்மையில் நடந்து முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியில் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது குறித்து பேசிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் எனது பங்களிப்பும் உள்ளது. அதனால் நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன்.

கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் வெவ்வேறு விதமான அளவுகோலின் கீழ் நடத்துவது வழக்கம். சிலருக்கு 20 போட்டிகள், சிலருக்கு 10 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியின் ஜெர்சியை நான் அணிந்தபோது எனக்கான வாய்ப்பு குறித்து நான் அறிந்திருந்தேன்.

அதற்கு தயாராகவும் இருந்தேன். அது என் கையிலும் இல்லை. நான் யார்? என்னால் என்ன செய்ய முடியும் என்பது மட்டுமே என் கையில் உள்ளது” என கூறியுள்ளார்.

Related Posts