Home Archive by category

நீதித்துறை மறுசீரமைப்பு, பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பிற்கு எதிராக இஸ்ரேலியர்கள் பேரணி

இஸ்ரேல் முழுவதும் பல நகரங்களை முற்றுகையிட்டு இலட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் 23 வது வாரமாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் நீதித்துறையை மறுசீரமைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களையும், நாட்டில் பாலஸ்தீனிய சமூகங்களை தாக்கும் கொடிய வன்முறையையும் எதிர்த்து இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே ஆரம்பமாகிய இப்போராட்டத்தில் தற்போது இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட சட்ட மாற்றங்களை தாமதப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் அதனை இரத்து செய்யும் வரை தாங்கள் இப்போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சுமார் 102 பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts