Home Archive by category

பூமியில் 32,808 அடி ஆழம் வரை துளை..!புதிய முயற்சியில் குதித்த சீனா

சீனாவானது கனிம வளங்கள், நிலா நடுக்கம், மற்றும் எரிமலை வெடிப்பு குறித்து அறிவதற்காக 32 ஆயிரத்து 808 அடி ஆழத்திற்கு பூமியை துளையிடும் பணியை ஆரம்பித்துள்ளது.

எண்ணெய் வளம் நிறைந்த ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள தாரிம் படுக்கையிலே இந்த பணிகளை தொடங்கியுள்ளது.

இந்த துளையிடும் பணிகள் 10 இற்குமதிக்கமான பாறை அடுக்குகளை ஊடுருவி சென்று பூமியின் மேலோட்டத்திலுள்ள 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான கிரெட்டே சியஸ் அமைப்பினையடையும்.

தாரிம் படுகையிலுள்ள கடுமையான நில சூழல் காரணாமாக பூமியில் துளையிடுவது எளிதன்று எனவும் கூறப்பட்டுள்ளது.

பூமியில் 20 வருட துளையிடலிற்கு பிறகு மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை 12,262 மீற்றர் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts