Home Archive by category

ஆயிரக்கணக்கான சிறுகதைகளை தோற்கடித்து முதலிடம் பெற்றுள்ள 'கிளிநொச்சி'

கிளிநொச்சி என பெயரிடப்பட்டுள்ள சிறுகதை சர்வதேச பரிசுக்காக போட்டியில் 56 உறுப்பு நாடுகளின் 6,641 சிறுகதைகளை முறியடித்து முதலிடம் பெற்றுள்ளது.

நியூஸிலாந்தின் ஒக்லாந்தில் வசிக்கும் குடும்ப மருத்துவரான ஹிமாலி மெக்கின்ஸ், என்பவரின் இந்த சிறுகதை, பசுபிக் பிராந்தியத்திற்கான பொதுநலவாய சிறுகதை பரிசை வெற்றிகொண்டுள்ளது.

ஒரு தாய், தமது மகனை தேடும் கதையே இந்த சிறுகதையில் இடம்பெற்றுள்ளது. இந்த சிறுகதையில், ஹிமாலி மெக்கின்ஸ், இலங்கையின் மலையக தமிழர், கிளிநொச்சி நியூசிலாந்து மற்றும் இலங்கை, தமிழ் மற்றும் சிங்களம், குடும்ப விசுவாசம், பாலினம், வர்க்கம் மற்றும் சமூக சமத்துவமின்மை, போர், புலம்பெயர் வாழ்வு மற்றும் நமது அடிப்படைத் தேவை ஆகியவற்றை ஆராய்ந்துள்ளார்.

திருடவோ, அழிக்கவோ அல்லது இழக்கவோ முடியாதது அன்பு என்பதை அவர் இந்த சிறுகதையின் மூலம் நிரூபித்துள்ளார்.

நீண்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் வரிசையில் இருந்து வரும் மலையகத் தமிழ் தேயிலை பறிக்கும் தொழிலாளியான நிஷாவைப் பற்றிய கதையே இந்த சிறுகதையில் இடம்பெற்றுள்ளது.

அவர் ஒரு நியூசிலாந்தரை மணந்து தனது மகனுடன் அங்கு செல்கிறார் - பின்னர் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் ஆயுதம் ஏந்துவதற்காக இலங்கைக்கு திரும்புகிறார்.

பின்னர் தனது மகனை கண்டுபிடிக்கும் ஆசையில், வட இலங்கையின் கிளிநொச்சியில் உள்ள போர்ப் பகுதிக்குள் செல்கிறாள்.

தாம், தமது வாழ்நாளின் பெரும்பகுதியை இலங்கைக்கு வெளியே வாழ்ந்திருந்தாலும், 2007 - 2009 வரை கொடூரமான உள்நாட்டுப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கையில் பணிபுரிந்தபோது எத்தனையோ அட்டூழியங்கள், ஆறாத காயங்களை சந்தித்ததாக எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலக்கிய இதழான “கிளிநொச்சி” விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts