Home Archive by category

கனடாவில் இன்று முதல் அமுலாகும் தடை

கனடாவில் கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அடிப்படையில் சில வகை கைத்துப்பாக்கிகள் கொள்வனவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்தல், இறக்குமதி செய்தல் மற்றும் கைமாற்றுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது விரிவான துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தின் ஓர் கட்டமாக கருதப்படுகின்றது.

வீட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் போன்றோருக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யப்பட உள்ளது.

ஆயுதங்களை கடத்துதலுக்கான தண்டனை 10 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட உள்ளது. 

Related Posts