Home Archive by category

இம்ரானை தூக்கிலிட கோரிக்கை

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து தொடங்கிய பரபரப்பு இன்று வரை ஓய்ந்த பாடில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஜாமீன் பெற்றார். ஆனால் தற்போது அவருக்கு எதிராக ஆளுங்கட்சியின் அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்ரானின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (PDM ) உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரானை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இம்ரான் கான் செய்த குற்றங்களுக்காக அவரை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்று தேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரியாஸ் அகமது கான் கூறினார். அப்போது நீதிமன்றத்தின் தீர்ப்புகள் குறித்தும் ரியாஸ் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் நீதிமன்றங்கள் இம்ரான் கானை தனது மருமகன் போல் வரவேற்கின்றன என்றார். அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வர ஷாபாஸ் ஷெரீப் அரசு முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே அறிவிக்கப்பட்ட போராட்டத்தை PDM தர்ணாவாக மாற்றத் தொடங்கியுள்ளதாக ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-பஸ்ல் (JUIF) தெரிவித்துள்ளது. JUI-F ஒரு ட்வீட்டில், 'நிர்வாகக் குழு இஸ்லாமாபாத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே தர்ணாவை இறுதி செய்துள்ளது. போராட்டத்தை தர்ணாவாக மாற்ற நிர்வாகக் குழு ஆயத்தங்களைத் தொடங்கியுள்ளது. PDM பல கட்சிகளின் அமைப்பு . இதில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்), ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல் (ஜூஐஎஃப்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன.

இம்ரான் கான் தனது தொண்டகள் சுமார் 7000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். சில தலைவர்களின் படத்தை பாகிஸ்தான் தெஹ்ரீஃப்-இ-இன்சாப் (PTI) பகிர்ந்துள்ளது. இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில், 'அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பு அல்லது துப்பாக்கிச் சூடுகளில் இருந்து பல நிராயுதபாணி எதிர்ப்பாளர்கள் இறந்ததற்கு யார் காரணம்? இதை விசாரிக்காமல், சுமார் 7000 பிடிஐ தொண்டர்கள், பெண்கள் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தை கைப்பற்றி அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கும் குண்டர்களுக்கு பாதுகாப்பு அமைப்புகள் உதவுகின்றன. நாங்கள் அனைவரும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்.

அல் காதர் அறக்கட்டளை வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு லாகூர் உயர் நீதிமன்றம் மே 23 வரை ஜாமீன் வழங்கியது. திங்கள்கிழமை காலை சுமார் 11.30 மணியளவில் புஷ்ரா பீவியுடன் இம்ரான் கான் நீதிமன்றத்தை அடைந்தார்.

 

Related Posts