Home Archive by category

ஜெர்மனியில் இந்துக் கோயில் மீது தாக்குதல்

ஜெர்மன் கயில்புறோன் கந்தசாமி கோயில் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அந்த ஆலயத்தில்தமிழில் பூசை இடம்பெறவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, சில தினங்களில் செந்தமிழ் குடமுழுக்கு இடம்பெற இருந்த நிலையிலேயே கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்திலேயே பூசை இடம்பெறவேண்டும் என்றும், நீஷபாஷயான தமிழில் கடவுளுக்கு வழியாடு இருக்கக்கூடாது என்று செயற்படுவோரின்  வேலைதான் இது என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.

அவர்களின் தூண்டுதலின் பெயரிலேயே அந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருக்கலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றார்கள்.

இந்த கந்தசாமி கோவிலில், அங்குள்ள தெய்வ விக்கிரகங்களுடன் கார்த்திகைப்பூ சுருவம் ஒன்றும் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுவருகின்மை குறிப்பிடத்தக்கது.

Related Posts